பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவை 100 தடவை பயிற்சி செய்யுமாறு மைத்திரி பணித்த காணொளி சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. Sri lanka police Pujith Jayasundara exercise video Getting viral Tamil news
பொலன்னறுவையில் சில தினங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி, நடைபாதை வளாகத்தை அரச தலைவர் மைத்திரிபால திறந்து வைத்த பின்னர் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவை 100 தடவை பயிற்சி செய்யுமாறு பணித்துள்ளார்.
இந்த நிகழ்வுக்கு உடற்பயிற்சி ஆடைகளை அணிந்தவாறே மைத்திரியும் ஏனைய அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர். பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
அந்த வளாகத்தில் பூஜித்த ஜயசுதந்தரவை மைத்திரிபால 100 தடவை பயிற்சி செய்ய வைத்தார். பூஜித்த ஜயசுந்தர எழுந்து நிற்க முற்பட்ட போது மைத்திரி அதற்கு இடமளிக்கவில்லை. ‘‘ஐ.ஜி.பி. என்றால் சாதாரண மனிதரா? நூறு தடவை பயிற்சி செய்ய வேண்டும்’’ என்று கூறி மறுபடியும் பயிற்சி செய்ய வைத்தார்.
பூஜித்த ஜயசுந்தர பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, சாதாரண பொலிஸ் அதிகாரி ஒருவர் – 10 தடவையும், ஐ.பி. 15 தடவையும், ஏ.எஸ்.பி. 20 தடவையும், எஸ்.எஸ்.பி. 30 தடவையும், டி.ஐ.ஜி. 50 தடவையும், மூத்த டி.ஐ.ஜி. 75 தடவையும், ஐ.ஜி.பி. 100 தடவையும் பயிற்சி செய்யவேண்டும் எனக் கூறினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்