இந்த நாட்டில் ஒரு துரோகி போன்று செயற்படும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தனது போராட்டத்தை எதிர்வரும் நாட்களில் தொடரவுள்ளதாக டான் பிரசாத் தெரிவித்தார். Sri Lanka Don Prasad Statement Oppose Police IG Tamil News
மஹசோன் பலகாயவின் அமித் வீரசிங்கவின் மனைவியுடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மனுவொன்றைத் தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
அதேபோன்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவையும் கைது செய்து அவர் தொடர்பில் உள்ள குற்றச்சாட்டுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் டான் பிரசாத் கேட்டுக் கொண்டார்.
டான் பிரசாத் என்பவர், ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை கல்கிஸ்ஸை வீட்டில் வைத்து அச்சுறுத்தியமை, கொழும்பில் கடந்த 2016. 11.03ஆம் திகதியன்று தவ்ஹித் ஜமாத் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை தற்கொலை தாக்குதல் நடத்தி விட்டு, தன்னையும் தீ வைத்து எரித்துக் கொள்ளுவேன் என அறிவித்திருந்தமை போன்றவற்றுக்காக பொலிஸாரினால் பல தடவைகள் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கைக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா
- மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்
- எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா செல்வதற்கான விசா மறுப்பு
- நாமல் குமார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
- ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு உத்தரவு
- 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டம்
- புத்தளம் பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
- குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
- இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
- சுமந்திரனை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்