பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. Special Bribery Court Tamil News
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றத்தை அமைப்பதற்கான சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த விஷேட மேல் நீதிமன்றத்தின் நீதியரசர்களாக சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.