சிங்கப்பூரின் முதல் குடியிருப்பு வட்டாரம்!

0
559
Singapore first resident

(Singapore first resident)

சிங்கப்பூரின் தெங்கா வட்டாரத்தில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 1,500 வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தமது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பின்னர், சிங்கப்பூரில் கட்டப்படும் முதலாவது புதிய வீடமைப்புப் தெங்கா வட்டாரம் ஆகும் .

மேலும் , தெங்கா வட்டாரம் முழுமையாக மேம்பாடு காணும் நிலையில், அது சுமார் 700 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் என்றும்,  அது தற்போதைய பீஷான் வட்டாரத்திற்கு நிகராக இருக்கும் என்றும் அமைச்சர் வோங் கூறியுள்ளார்.

அதோடு ,  தெங்கா வட்டாரம், சிங்கப்பூரின் தனிச்சிறப்பு மிகுந்த ஒரு வட்டாரமாக உருவாக்கப்பட்டு வருவதாக வோங் குறிப்பிட்டுள்ளார்.

மற்றும் அந்த வகையில், பசுமைக் கருப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படும் தெங்கா வட்டாரம், சிங்கப்பூரின் வனப் பகுதியில் அமையப்பெறும் முதல் குடியிருப்பு வட்டாரமாக இருக்கும்.

tags:-Singapore first resident

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**