போலி அரச செயலகமொன்று நிட்டம்புவயில் முற்றுகை: ஒருவர் கைது

0
373
siege arrested Nittambuwa fake royal secretariat

நிட்டம்புவ கலகெடிஹேன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த போலி அரச நிறுவனமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். siege arrested Nittambuwa fake royal secretariat

இந்த நிறுவனத்தில் அரச செயலகமொன்றினால் வழங்கப்படும், உறுதிப்படுத்தப்படும் பத்திரங்கள் என்பன போலியாக தயாரித்து விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.

119 ஆம் இலக்கத்துக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் பேரிலேயே இந்நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5 இரப்பர் முத்திரைகள், கணனியொன்று, பிரின்டர் ஒன்று மற்றும் அரச காரியாலயத்தில் பயன்படுத்தப்படும் ஆவணங்களின் பிரதிகள் என்பன இந்நிலையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 32 வயதுடைய நபர் அத்தனகல்லை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

tags :- siege arrested Nittambuwa fake royal secretariat

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :