கனடாவின் ஒன்றாரியோ மாகாண ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
பாடசாலையில் எதிரில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்திற்கு அருகாமையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்திருந்த ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மற்றுமொரு சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெப்ரன் பாடசாலையின் எதிரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பாடசாலை மாணவர்களா இல்லையா என்பது குறித்து போலீசார் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
குறித்த இடத்தில் பல துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பாடசாலை மூடப்பட்டது பின்னர் எவ்வித ஆபத்தும் கிடையாது என அறிந்து கொண்டதன் பின்னர் நான்கரை மணியளவில் பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பாடசாலை கட்டிடத்திலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கி வன்முறைகள் எந்த வகையிலானது என்றாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இவ்வாறு பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெறும் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியது என்னவோ டொரன்டோவின் மேயர் ஜான் டோரி தெரிவித்துள்ளார்.
