முதல் முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
ரயானா பர்ணாவியுடன் சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல் கர்னி உள்பட 4 பேர் AX-2 விண்வெளி பயணத்தில் இணையவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் பயணிக்க உள்ள விண்கலம் அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியளித்த சவூதி அரேபிய அரசு அடுத்த நான்கே ஆண்டுகளில் விண்வெளி பயணித்திற்கான அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.