Sample Legislative Meeting behalf DMK title ‘Dissolving Democracy
சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில், “படுகொலையாகும் மக்கள், பறிபோகும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் திமுக சார்பில் மாதிரி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. திருக்குறளுடன் தொடங்கிய மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தை, சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் ராமசாமி, அபுபக்கர் ஆகியோர் வழிமொழிந்தனர்.
பின்னர், காவிரி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். காவிரி மேலாண்மை ஆணையம் அதிகாரம் குறைந்த அமைப்பு என்று கூறிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பு செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார். ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
More Tamil News
- ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா – மாடுகள் முட்டி 17 பேர் காயம்!
- ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன் – கருணாஸ்!
- பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!
- புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க சாத்தியக் கூறுகள் உள்ளதா?
- கர்நாடகாவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுமா?
- தூத்துக்குடியில் ரஜினி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!