சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பெண் சமூக ஆர்வலருக்கு கொலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (Sabarimala went go says woman social activist murder)
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை புனேயை சேர்ந்த பெண் ஆர்வலர் திப்தி தேசாய் வரவேற்றுள்ளார். சம உரிமைக்காக போராடிவரும் அவர் சபரிமலை கோவிலுக்கு தான் செல்ல போவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் திப்தி தேசாய்க்கு கொலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு 200 க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன. அதில் சிலவற்றில் கொலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
அவரது பேஸ்புக் பக்கத்திலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் சபரிமலை கோவிலுக்கு சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்தை போலியாக சித்தரித்தும் வெளியிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் தனக்கு கொலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த முறை இடைவிடாது அருவருக்கத்தக்க வகையில் அவதூறுகள் வருவதாகவும் சமூக ஆர்வலர் திப்தி தேசாய் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம்; நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை
- பிரதமர் வாய்ப்பை உதறித் தள்ளினார் கருணாநிதி; ப.சிதம்பரம்
- மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை
- திருமுருகன் காந்திக்கு 2 ஆவது நாளாக தீவிர சிகிச்சை
- சமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு
- வீதி விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழ் நாட்டில் அதிகரிப்பு
- உடுமலையில் காரும் வானும் விபத்து; சம்பவ இடத்தில் 04 பேர் பலி
- தமிழகத்தில் 03 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கைச்சாத்து
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Sabarimala went go says woman social activist murder