சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரிய மனு மீதான விசாரணை இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. (sabarimala row supreme court will decide review plea tamil News)
கடந்த மாதம் கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியானது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் சென்ற வாரம் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், 5 நாட்கள் நடை திறக்கப்பட்டதனால் பெண் ஒருவர் கூட கோவிலுக்குள் கடைசி வரை அனுமதிக்கப்படவில்லை. 10 முதல் 50 வயது பெண்கள் யாருமே அனுமதிக்கப்படவில்லை.
கடந்த ஐந்து நாட்களுமே கோவிலை சுற்றி தொடர் போராட்டம் நடைபெற்றதுடன், பாரிய கலவரம் கூட நடந்தது. இந்த நிலையில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.
சபரிமலையில் போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து பலர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சீராய்வு மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கின்றது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளலாமா என்று இன்று முடிவு செய்யப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வேலையிடங்களில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் வீதம் அதிகரிப்ப
- சபரிமலையில் இன்று நடை அடைப்பு; 6 பெண்கள் தடுத்து நிறுத்தம்
- கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் தற்கொலை செய்ய வேண்டும்
- சபரிமலைக்குள் செல்ல முயற்சித்த ரஹானா பாத்திமா வீட்டில் தாக்குதல்
- தமிழகத்தில் ஒரே நாளில் பன்றிக் காய்ச்சலால் 04 பேர் பலி
- நெடுஞ்சாலை அமைப்பதில் எந்த முறைகேடும் நடக்காததால் மேல்முறையீடு
- இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
- ஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; sabarimala row supreme court will decide review plea tamil News