சபரிமலைக்குள் செல்வதற்கு முயற்சித்த சர்ச்சைக்குரிய பெண்ணியவாதியான ரஹானா பாத்திமாவின் வீடு மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (Sabarimala Protests Temple minister criticises police rehana fathima)
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடரும் நிலையில், இன்றைய தினம் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா செல்வதற்கு முயற்சித்துள்ளனர்.
எனினும் பக்தர்களின் போராட்டம் காரணமாக அவர்களை கேரளா மாநில அரசு திரும்பி அனுப்பியதுடன்,. முதற்கட்டமாக பத்திரிக்கையாளர் கவிதாவுடன் கேரளா மாநில அய்யப்ப பக்தர் இருமுடிகட்டி செல்வதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.
இதன்பின்னர் கவிதாவுடன் செல்வது ரஹானா பாத்திமா என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டதனை அடுத்து, பல்வேறு தரப்பில் அரசு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
கேரள மாநிலத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சுரேந்தரன் வெளியிட்ட அறிக்கையில், அரசின் நோக்கம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே. சமூக செயற்பாட்டாளர்களுக்கு கிடையாது.
எனவே, போராட்டக்காரர்களுக்கும், செயற்பாட்டாளர்களும் ஒரு வேண்டுகோள். சபரிமலை போராடுவதற்கான இடம் அல்ல. சபரிமலைக்கு வந்து உங்கள் போராட்ட எண்ணங்களையும், வலிமையையும் வெளிப்படுத்த வேண்டாம்.
சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்களில் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர், மற்றொருவர் பத்திரிகையாளர். சபரிமலை விஷயம் இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெவித்தார்.
இதற்கிடையே கொச்சியில் உள்ள ரஹானாவின் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அவருடைய வீட்டில் கற்கள் வீசப்பட்டுள்ளது.
சபரிமலை கோவில் பகுதியில் பதற்றம் தொடரும் நிலையில் ‘நெருப்புடன் கேரளா அரசு விளையாடுகின்றது,’ என காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் ரஹானா, திரும்ப மாட்டேன் என கூறியுள்ளார்.
பொலிஸார் பெண்கள் இருவருடனும் பேச்சுவார்த்தையை மேற்கொண்ட போது திரும்ப போவது இல்லை என ரஹானா அடம்பிடித்ததாக இந்துஸ்தான் டைமஸ் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.
அனைத்து பக்தர்களும் 41 நாட்கள் விரதம் இருந்தது போன்று நானும் விரதம் இருந்து உள்ளேன். என்னை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு; தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு
- உளுந்தூர்பேட்டையில் பஸ்ஸூம் லொறியும் விபத்து; 04 பேர் பலி; பலர் கவலைக்கிடம்
- சபரிமலை கோவிலில் பண்பாடு தான் முக்கியம்; தமிழிசை
- தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சபரிமலையில் தொடரும் பதற்றம் ; நீதிமன்றில் பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனுத்தாக்கல்
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பத் தாமதம்
- இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது; மு.க. ஸ்டாலின்
- ஊடக சுதந்திரம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது; எஸ்.பி. வேலுமணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Sabarimala Protests Temple minister criticises police rehana fathima