ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.ஜகாரியன் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு வருகைத்தர விருப்பம் தெரிவித்துள்ள ரஷ்ய சுகாதார அமைச்சரை கௌரவத்துடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்க தாம் தயாராகவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.