பிரான்ஸில், வீடு ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், குழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர். robbers locked children insidee room
பரிஸ் பதினோராம் வட்டாரத்தில் தாதியார் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்துகொண்டு ஆயுதங்களுடன் உள் நுழைந்த 3 கொள்ளையர்கள், அங்கிருந்த குழந்தைகள் அனைவரையும் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்கள்.
100,000 யூரோக்கள் பணம் கொண்ட பெட்டி ஒன்றினை வீடு முழுவதும் தேடியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு அப்பெட்டி கிடைக்காமல் கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த தாதியார், சில சிக்கலுக்கு உள்ளானார்.
அங்கு வந்த காவல்துறையினர் தாதியரிடம் விசாரணைகள் மேற்கொண்டதோடு, வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டுள்ளனர். உடனடியாக அங்கிருந்து 100,000 யூரோக்கள் பணம் கொண்ட பெட்டி ஒன்றினை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இந்த பணப்பெட்டி பற்றி தாதியிடம் விசாரிக்கும்போது, தனக்கு எதுவும் தெரியாது என தாதியார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, மறுநாள் காவல்துறையினர் தாதியரின் 21 வயதுடைய மகனை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!