(reports fraudulent trading exports gold Sri Lanka tamil news)
இலங்கையிலிருந்து தங்கம் கலந்த மணலை ஏற்றுமதி செய்யும் பாரிய மோசடி வர்த்தகம் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சுங்கத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 64 மணல் கொள்கலன்களிலுள்ள மணல் மாதிரிகளை சோதனையிட்ட போது, அவற்றில் தங்கம் கலந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கை சுங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதமாகத் தங்கம் கலந்ததாக கூறப்படும் மணலை ஏற்றுமதி செய்யும் குற்றச்சாட்டின் கீழ், 50 இலட்சம் ரூபா அபராதம் விதித்து, கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 15 கொள்கலன்கள் சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் பின்னரே இவை தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு இதுபற்றி அறிவித்துள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
(reports fraudulent trading exports gold Sri Lanka tamil news)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்