கண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
1273
tamilnews kandy violence suspects remand deldeniya courts

(Remand extended Mahason Balakaya Leader amith weerasinghe)
கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சூத்திரதாரியாகக் கருதப்படும் மஹாசோன் பலகாய என்ற அமைப்பின் தலைவர் அமீத்தின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட அமீத் வீரசிங்க உட்பட 27 பேருக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, 140 க்கும் அதிகமான சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், பிரதான சந்தேக நபரான கடும்போக்கு பேரினவாதக் குழுவாக கருதப்படும் மஹாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்கவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், அவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அமீத வீரசிங்க சமூக வலைத்தளங்களினூடக திட்டங்களை தீட்டி பிரச்சினையை ஏற்படுத்த பிரதான காரணமாக இருந்துள்ளதாகவும் வன்முறை சம்பவங்களை தூண்ட காரணமாக பிரதான காரணமாக இருந்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Remand extended Mahason Balakaya Leader amith weerasinghe