களுத்துறைக்கு சிவப்பு எச்சரிக்கை : இதுவரை 5 பேர் பலி

0
807
red alert kalutara palindanuwara

(red alert kalutara palindanuwara)
களுத்துறை – பாலிந்த நுவர பிரதேச செயலக பிரிவில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.

இதனால் குறித்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நாட்டில் நிலவும் சீரற்ற காலைநிலை தொடர்ந்து காணப்படும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தப்போவ நீர்தேக்கத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த நபரொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதோடு மேலும் ஹொரனை, பொலன்னறுவை, மொனராகலை பகுதிகளிலும் இயற்கை அனர்த்தங்களால் மரணங்கள் சம்பவித்துள்ளன.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இடைக்கிடையில் 40 முதல் 45 கிலோ மீட்டருக்கு இடையில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
இதேவேளை, மண்சரிவு அபாய எச்சரிக்கை உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் இடம்பெறும் அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :