(ramdevs messaging app kimbho disappears google play store)
உலகின் முன்னணியில் திகழ்ந்துவரும் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ்அப்-க்கு போட்டியாக “கிம்போ” என்ற பெயரில் இன்று புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ஆப் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியான சிறிது நேரத்திலேயே 5 ஆயிரம் பேர் வரை பதிவிறக்கம் செய்திருந்தனர். ஆனால், போலோ என்ற பெயரில் ஏற்கனவே இருந்த ஒரு செயலியின் கோடிங்கை நகலடித்து கிம்போ உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் போலோ செயலியானது பாதுகாப்பு இல்லாதது என பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. போலோவின் அம்சங்களை காபி அடித்து உருவாக்கப்பட்டுள்ள கிம்போ-வும் பாதுகாப்பு இல்லாதது, உங்களது தகவல்கள் பொதுவெளியில் விடப்படலாம் என சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் கிம்போ ஆப் சிலமணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், அதே பெயரில் பல போலி செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன.
OUR GROUP SITES
ramdevs messaging app kimbho disappears google play store