Raman Noampi Tihar jail – Prisoners Hinduism
இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற சிறைகளுள் முக்கியமானதாகக் கருதப்படுவது திகார் சிறை, இது தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது. தற்போது இங்கு 15,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளில், இந்து மதத்தைச் சேர்ந்த 56 பேர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் கடைப்பிடிக்கும் ஒரு மாதகால ரம்ஜான் நோம்பை மேற்கொண்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், ரம்ஜான் நோம்பில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளது கைதிகளிடையே இருக்கும் மதநல்லிணக்கத்தை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது என்றார்.
ரம்ஜான் நோம்பை முன்னிட்டு தொழுகை நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சிறை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். மேலும், சூரியன் மறையும் நேரத்தை காட்டும் வகையில் கைதிகள் இருக்கும் பகுதியில் கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சிறையின் கண்காணிப்பாளரும் இஃப்தார் நோன்பில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைதிகளில் உள்ள 97 பெண்கள் நோம்பை கடைப்பிடித்து வருவதாகவும், கடத்தல் வழக்கில் சிக்கி சிறையிலுள்ள 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் மகனுக்காக நோம்பு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த சிறை அதிகாரி ஒருவர், 21 வயது வாலிபர் ஒருவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தனது சக சிறைவாசிகள் நோன்பில் ஈடுபட்டுள்ளதால் தானும் அதில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேபோல சிறையில் இருந்து விரைவில் விடுதலை பெற வேண்டி ஒரு கைதி நோம்பு மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
More Tamil News
- தலைமுடியை ஸ்டைலாக வெட்டியதால் கண்டிப்பு – மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
- நாளை மாதிரி சட்டமன்ற கூட்டம் : திமுக அறிவிப்பு!
- பேரவையில் புகைப்படங்களை காட்டி முதல்வர் ஷோ – டிடிவி தினகரன் குற்றசாட்டு!
- ஸ்டெர்லைட் கலவரத்திற்கு காரணம் தி.மு.க MLA – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
- தூத்துக்குடி சம்பவம் – புதிய வீடியோவை வெளியிட்ட தமிழக காவல்துறை!