Home Top Story தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு!

தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு!

0
தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு!

தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்கள் அடுத்த வாரம் முதல் கட்டுப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் Rajitha Senarathne Hospitals Charge

சுமார் 53 தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்கள் கட்டுப்படுத்தப்படவுள்ளது.

கட்டணங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் இறுதி அறிக்கையொன்றை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு, சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்னும் இரண்டு தினங்களில் பணிப்பாளர் நாயகம் , தனது இறுதி அறிக்கையை சுகாதார அமைச்சருக்கு வழங்கவுள்ளார்.

இதன்பின்னர் கட்டண குறைப்பானது வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது. சத்திரசிகிச்சை, ஆய்வு கூட மற்றும் பிரசவ கட்டணங்கள் குறைக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை