வடக்கு பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ்

0
119

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (திட்டமிடல்) திருமதி ராஜினி ஜெயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் நேற்று (07) வழங்கி வைத்தார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்து கொண்டார்.