சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.0 பட டீசர் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படத்தின் டீசரையும் 3டியில் வெளியிட்டனர் படக்குழுவினர். இந்த 3D டீசர் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது. வேறு படம் பார்க்க வந்தவர்களை இந்த 3D டீசரை வெளியிட்டு பாடாய்படுத்தி எடுத்துள்ளனர். Rajini 2.0 teaser made tension theater gossip
தியேட்டர்களிற்கு வந்தவர்களுக்கு 3D கண்ணாடியை வழங்கியதோடு, ஒவ்வொருவரும் கண்ணாடியை அணிந்திருக்கிறார்களா என்பதை கண்காணித்துள்ளனர். அங்கு வந்த ஒரு சிலர், டீசர் திரையிடும்போது கண்ணாடியை அணிந்து கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க, அவர்களின் இருக்கைக்கே சென்று கண்ணாடியை அணிந்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்ல, அந்த டீசரையும் திரும்பத்திரும்ப திரையிட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு காட்சியும் அரை மணி நேரத்தும் மேல் தாமதமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இளசுகள் இதை வரவேற்றாலும் பலர் இதனால் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.