ராதிகா ஆப்தே எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர். திரையுலகில் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சியளித்தவர் ராதிகா ஆப்தே.Radhika Apte Slams co-actor
அவரின் கருத்துக்களுக்கு பின் பல நடிகைகளும் தாங்கள் காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லைக்குள்ளானதாக பேட்டி அளித்தனர்.
தற்போது ராதிகா ஆப்தே நடிகர் ஒருவர் தனக்கு நள்ளிரவில் மசாஜ் செய்வதாக கூறி தவறான எண்ணத்துடன் நடந்துகொண்டதாகக் கூறி அதிர்ச்சி தந்திருக்கிறார்.
ராதிகா ஆப்தே இதுபற்றி கூறிய போது, படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றபோது எனக்கு முதுகுவலி இருந்தது. படப்பிடிப்பு முடித்தபிறகும் முதுகுவலியால் அவதிப்பட்டேன். காட்சி முடிந்து ஓய்வு எடுக்க எனது அறைக்கு லிப்ட்டில் சென்றேன். அப்போது லிப்டில் ஏறிய சக நடிகர் என்னிடம் பேச்சு கொடுத்தார். அவரிடம் அதற்கு முன் நான் பேசியதும் கிடையாது, ஒருவருக்கொருவர் அறிமுகமும் கிடையாது. ஆனாலும் அவர் என்னிடம், ‘நள்ளிரவில் உங்களுக்கு மசாஜ் தரட்டுமா, எனது உதவி உங்களுக்கு வேண்டுமா?’ என்றார்.
அவர் அப்படி கேட்டதும் நான் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன். அந்த நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயன்றது பற்றி பட குழுவினரிடம் தெரிவித்தேன். அவர்கள் நடிகரை கண்டித்தனர். பிறகு அந்த நடிகர் என்னிடம் மன்னிப்பு கேட்டார், என்றார்.
Radhika Apte Slams co-actor
<RELATED CINEMA NEWS>>