சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவை பார்க்க மக்கள், மாணவர்கள், குழந்தைகள் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக குடியரசு தின விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்படுவதாகவும், வயது மூப்பினை கருத்தில் கொண்டு மாவட்டம் தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று ஆட்சியர்கள் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
குடியரசு தினத்தின்று சென்னை மெரினா கடற்கரையில் காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியேற்றி வைக்கிறார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை தவிர்த்து, வழக்கம் போல பல்வேறு துறையின் அணிவகுப்புகளும் நிகழ்ச்சிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.