கேரளாவில் சபரிமலைக்குள் 40 வயதுடைய பெண் ஒருவருடன் செல்வதற்கு முயற்சித்த தமிழ் குடும்பம் மீது, போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தை அங்கு இருந்த பொலிஸார் வேடிக்கை பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (protesters attacked tamil couple sabarimala)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு போராட்டம் வலுத்துள்ளது.
சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டம் நடைபெற்றதுடன், சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பெரும் போராட்டம் இடம்பெற்றது.
இந்த நிலையில் கோவிலுக்கு சென்னையில் இருந்து சென்ற தமிழ் நாட்டு தம்பதிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சில பெண்களும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்த நிலையில் பொலிஸ் அந்த சம்பவம் நடக்கும் போது, அதனை வேடிக்கை பார்த்து வந்ததாக கூறப்படுகின்றது.
பொலிஸார் போராட்டக்காரர்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்த நிகழ்வு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஜம்மு காஷ்மீரில் மூன்று ஆயுததாரிகள் பலி
- இராமநாதபுரத்தில் விபத்து ; 03 இளைஞர்கள் பலி – ஐவர் காயம்
- வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; மக்களுக்கு எச்சரிக்கை
- பெற்ரோல், டீசல் விலை குறைப்பு; பிரதமர் மோடி யோசனை
- சபரிமலைக்கு பெண்கள் அனுமதி ; நாளை பாதுகாப்பு பலப்படுத்த திட்டம்
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பத் தாமதம்
- இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது; மு.க. ஸ்டாலின்
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; protesters attacked tamil couple sabarimala