புகையிரதம் முடிந்து தற்போது பஸ்கள்…

0
513
Private Bus Strike Tamil News

போக்குவரத்து அபராத தொகையை அதிகரித்தமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அனைத்து இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. Private Bus Strike Tamil News

எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது நேற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனால் மக்கள் பெரும் அவதிக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.