கனடா – டொராண்டோ நகருக்கு அடுத்துள்ள Markham – Stouffville வைத்தியசாலையில் அவசரப்பிரிவு வரவேற்புப் பதிவு இயந்திரத்தில் தமிழ் மொழிக்கு(ம்) முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள டொராண்டோ பெருநகரப் பிராந்தியப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் பலவற்றிலும் தமிழ் மொழியில் அறிவிப்புப் பலகைகள் நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளமை நாம் அறிந்ததே.
எனினும் நோயாளிகள் சுயமாகவே தம்மைப் பதிவு செய்துகொள்ளும் Self Registration முறையிலான இயந்திரத்தில் தமிழ் மொழி தற்போது இணைக்கப்பட்டுள்ளது.
சொற்களின் பயன்பாடு மற்றும் எழுத்துப் பிழைகள் குறித்த கரிசனைகள் உள்ளபோதிலும் ஆங்கிலப் புலமையற்ற தமிழ் மொழி பேசும் நோயாளர்களின் வசதிகருதி, மருத்துவமனை நிர்வாகம் தமிழ் மொழிக்கும் முன்னுரிமை அளித்துள்ளது.
மேலும் குறித்த வைத்தியசாலையில் வலைத்தளத்தையும் தமிழ் மொழியில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்லின சமூகங்களினதும் மதிப்புக்குரிய நாடாக கனடா பெரும் மதிப்பைப் பெறுவதற்கு இவ்வாறான மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதே காரணம்.




