ஜனாதிபதி பணிக்க வேண்டும் – இல்லையென்றால் கிடைக்காது

0
400
president maithripala sirisena have order company owners vadivel

சமகால பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வேதன அதிகரிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலாளிமார் சம்மேளனத்திற்கு உத்தரவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். president maithripala sirisena have order company owners vadivel

கொழும்பு – ராஜகிரியவில் உள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே வடிவேல் சுரேஷ் இந்த விடயத்தை வலியுறுத்தி உள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகின்ற நிலையில், புதிய ஒப்பந்தத்தின் நிமித்தம் இன்று தொழிங்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளர் ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுசெயலாளர் வடிவேல் சுரேஷ் மற்றும் பெருந்தோட்டக் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன் ஆகியோரின் தலைமையிலான தூதுக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

பெருந்தோட்ட யாக்கங்கள் சார்பில், முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் கனிஸ்க வீரசிங்க முகாமைத்துவ கம்பனிகளின் தலைவர் ரொசான் ராஜதுரை, உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டனர்.

இன்றைய பேச்சுவார்த்தைகளின் போது பெருந்தொட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொகை தொடர்பிலோ ஏனைய சலுகைகள் தொடர்பிலேயே எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், குறித்து பேச்சுவார்த்தை தொடர்பில் இன்றைய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்,

முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டை இன்றைய பேச்சுவார்த்தையில் தாம் அறிந்து கொண்டதாகவும், அதில் தமக்கு திருப்தி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
president maithripala sirisena have order company owners vadivel

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites