உச்சி மாநாட்டில் இன்றைய தினம் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அனுர

0
64

2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு (11) டுபாயில் ஆரம்பமானது. குறித்த உச்சி மாநாட்டில் இன்றைய தினம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் உலக அரசுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சி மாநாடு நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.