ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஐயகலா மகேஸ்வரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எதற்கு என்று குறிப்பிடப்பட்டு, யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (Posters Jaffna opposite Vijayakala Maheswaran)
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றியமை மற்றும் அமைச்சர் பதவியை ஐம்பது கோடிக்கு விற்ற விஜயகலாவிற்கு எதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எனக் குறிப்பிடப்பட்டு, இளைய தலைமுறை என்ற பெயரிலேயே இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழீழ விடுதைப் புலிகளின் கை வடக்கு கிழக்கில் ஓங்க வேண்டுமென்றும் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென்றும் விஐயகலா தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கள் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்ததோடு, தெற்கு அரசியல்வாதிகள் மத்தியில் எதிர்ப்புக்களும் கிளம்பியிருந்தன.
இந்தநிலையில் தன்னுடைய அமைச்சுப் பதவியையும் விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா செய்திருந்தார்.
அத்தோடு, தமிழ் மக்களுக்காகவே தான் பதவி விலகுவதாகவும் விஐயகலா குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு ஆதரவாக தமிழ்த் தலைவி எனக் குறிப்பிடப்பட்டு கடந்த சில தினங்களிற்கு முன்னர் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த நிலையிலையே இன்றைய தினம் அவருக்கு எதிரான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
- வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது
- பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்
- ஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு; நோர்வூட்டில் பதற்றம்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Posters Jaffna opposite Vijayakala Maheswaran