பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியும், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பாரிஸ் நகரில் பொதுவெளியில் ஒன்றாக தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு மனைவி சோஃபி கிரெகோயரை கடந்த 2023ம் ஆண்டு பிரிந்தார். அதுபோல் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி தனது காதலரும் நடிகருமான ஆர்லாண்டோ ப்ளூமை கடந்த ஜூலை மாதம் பிரிந்தார்.
இரு ஜோடிகளும் பிரிந்த பிறகு, கடந்த ஜூலை மாதம் கனடாவின் மாண்ட்ரீல் நகரில் கேட்டி பெர்ரியும், ஜஸ்டின் ட்ரூடோவும் தனியாக சந்தித்தபோது, அவர்கள் காதல் குறித்த செய்திகள் வெளியானது.
அதை தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் கலிபோர்னியாவின் சாண்டா பார்பரா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு படகில் இருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த ஜோடி முதல் முறையாக பாரிஸ் நகரில் பொதுவெளியில் ஒன்றாக தோன்றியுள்ளது.
தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பாரிஸ் சென்றிருந்த கேட்டி பெர்ரி, நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, இருவரும் கைகோர்த்தபடி ஜோடியாக நடந்து வந்தனர்.
ஜஸ்டின் ட்ரூடோவின் குழந்தைகளும் கேட்டி பெர்ரியை அன்புடன் வரவேற்றுள்ளனர். இருவருக்கும் இடையே இயல்பான பிணைப்பு ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளன.



