police said committed suicide faith spirituality indiatamilnewa tamilnews
டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கிடைத்துள்ள கடிதத்தில், ‘ஆன்மிகத்தின்மீது கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாக அவர்கள் தற்கொலைசெய்துள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள புராரி பகுதியில் உள்ளது புராரி சாண்ட் நகர். இந்தப் பகுதியில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பில் வாழ்ந்துவரும் குடும்பத்தினர், அப்பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்தனர்.
மேலும், ப்ளைவுட் வணிகத் தொழிலையும் செய்துவந்தனர். இந்நிலையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர், கண் மற்றும் வாய் பகுதி துணியால் கட்டப்பட்டு தூக்கிட்டநிலையில் இருந்தனர்.
77 வயது மூதாட்டி, தனி அறையில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இது தற்கொலையா… கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கடிதங்கள்குறித்து காவல்துறை தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கடிதத்தில், ‘மனித உடல் என்பது தற்காலிகமானது.
ஒருவர், கண் மற்றும் வாயை மூடிக்கொள்வதன்மூலம் பயத்தைக் கடந்துவிடலாம். இந்த 11 பேரும் இந்தச் சடங்குகளைப் பின்பற்றினால் எல்லாப் பிரச்னைகளும் எளிதாகத் தீர்ந்து, முழுமையாக ரட்சிக்கப்படலாம்’ என்று உள்ளது என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும், அவர்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து குறிப்புகளிலும் வாழ்க்கையை முடித்துகொள்வது பற்றியும், அமைதியை அடைவது பற்றியுமே உள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆன்மிகம் சார்ந்த மூட நம்பிக்கையின் காரணமாக இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதும் காவல்துறை, அந்தக் குடும்பத்துக்கு இந்த மாதிரியான ஆன்மிக போதனைகளை வழங்கியது யார் என்பதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து இறந்துபோன குடும்பத்தினரின் உறவினர், ‘இந்தக் குடும்பத்துக்கு எந்த விதமான பொருளாதரப் பிரச்னைகளும் இல்லை. ஒரு லோன்கூட கிடையாது.
அவர்கள் எதற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அவர்கள், கொலைதான் செய்யப்பட்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார். டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம்குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
police said committed suicide faith spirituality indiatamilnewa tamilnews
tags;-accident aeroplane black box return
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- 8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி! (காணொளி)
- இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்!
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :