இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். (PM Modi Top BJP Leaders Greet President Kovind)
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 73 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
இதனையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். அதில், ‘ஜனாதிபதியின் ஞானம் மற்றும் பல்வேறு விஷயங்களில் அவரது செயல்பாடுகளால் இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கின்றது.
நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர் இணைந்திருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்தனை செய்வதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சபரிமலை விவகாரம்; முழுக்கடையடைப்பு போராட்டம் இரத்து
- ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை
- மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை
- திருமுருகன் காந்திக்கு 2 ஆவது நாளாக தீவிர சிகிச்சை
- சமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு
- ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சோதனை!
- போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த ஹெச்.ராஜா!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; PM Modi Top BJP Leaders Greet President Kovind