வாரணாசி தொகுதியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளதனால் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவின் புரி தொகுதியில் போட்டியிடுவதற்கு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. (PM Modi constituency changed parliament election)
பிரதமர் நரேந்திர மோடி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குஜராத்தில் உள்ள வதோதரா, உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நிறுத்தப்பட்டிருந்தார்.
இவரை 1 இலட்சத்து 79 ஆயிரத்து 739 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்ததனால் வாரணாசி தொகுதியை நரேந்திர மோடி தக்க வைத்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வாரணாசி தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டதுடன், இதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் நலத் திட்டங்கள் வாரணாசியில் நடைபெற்றன.
வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற திட்டத்தில் நரேந்திர மோடி, அந்த தொகுதி மக்களுக்காக அதிகளவில் செய்துள்ளார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் குஜராத்தில் வெளி மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடந்த போது அது வாரணாசியில் எதிரொலித்தது.
வாரணாசி முழுவதும் நரேந்திர மோடியை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அதில் ‘மோடியே வாரணாசியை விட்டு வெளியேறு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் வாரணாசியில் மோடி எதிர்ப்பு அலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து 2014 ஆம் ஆண்டு தேர்தலில் கெஜ்ரிவாலை நிறுத்தியது போல இந்த தடவையும் வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ள அவர் விரைவில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் இணையவுள்ளனர். எனவே அவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் மோடியை எதிர்த்து களம் இறங்கவுள்ளனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ் நாடு மூன்றாவது இடம்
- பெற்ரோல், டீசல் விலை தொடர்பில் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
- பாடகி சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்; வைரமுத்து
- அப்துல் கலாம் பிறந்த நாள்; பேக்ரும்பு மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்காரம்
- இளம் பெண் மீது அசிட் வீச்சு தாக்குதல்; சந்தேக நபர் தலைமறைவு
- வீட்டிற்கே மதுபானங்கள்..! – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..!
- மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா!
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; PM Modi constituency changed parliament election