பெற்ரோல், டீசல் விலை குறைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி யோசனை வழங்கியுள்ளார்.
பெற்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துவரும் நிலையில், அதுகுறித்து விவாதிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் 3 ஆவது வருடாந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். (Petrol diesel prices drop idea Modi)
இந்தக் கூட்டத்தில், சவுதி அரேபிய பெற்ரோலிய அமைச்சர் காலித் அல் பாலி, ஐக்கிய அரபு மந்திரி மற்றும் சர்வதேச முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெற்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
எரிசக்தி துறையில், வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலைக்காக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை சர்வதேச எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மோடி மேலும் தெரிவிக்கையில், மசகு எண்ணெய் விலை உயர்வால், இந்தியா போன்ற எண்ணெய் நுகர்வு நாடுகள், கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றன.
பணவீக்கம் உயருகின்றது. இந்த விடயத்தில், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் உதவி தேவை. வளரும் நாடுகளில், அதிக நிலப்பரப்பில் எண்ணெய் எடுக்கும் பணி நடக்கின்றது.
இதில், தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்களில் வளர்ந்த நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும். எரிவாயு துறையில் விநியோக பணியில் தனியாரின் பங்களிப்பு இருக்க வேண்டும்.
எண்ணெய் சந்தையில், எண்ணெய் விலையை எண்ணெய் உற்பத்தி நாடுகளே தீர்மானிக்கின்றன. போதுமான உற்பத்தி இருந்த போதிலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள் கடைபிடிக்கும் தனித்துவமான சில நடவடிக்கைகளால், எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது.
எண்ணெய் விலை குறைய எண்ணெய் உற்பத்தி நாடுகள் இன்னும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மற்ற சந்தைகளில், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே கூட்டு நிலவுகின்றது. அதுபோல், எண்ணெய் சந்தையிலும் உற்பத்தி நாடுகளுக்கும், நுகர்வு நாடுகளுக்கும் இடையே கூட்டு நிலவினால், மீண்டு வரும் சர்வதேச பொருளாதாரம் ஸ்திரம் அடைந்து, விலை குறைய வாய்ப்புள்ளது.
மேலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள், பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதன்மூலம், அந்தந்த நாடுகளின் நாணயத்துக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும்
- செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி
- பெருமாள் கோவில் 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு
- அப்துல் கலாம் பிறந்த நாள்; பேக்ரும்பு மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்காரம்
- இளம் பெண் மீது அசிட் வீச்சு தாக்குதல்; சந்தேக நபர் தலைமறைவு
- பிரதமர் மோடி ஒடிசாவின் புரி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்
- பாலியல் குற்றச்சாட்டு; பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Petrol diesel prices drop idea Modi