Mennecy பகுதியில் மனைவி தன்னை ஏமாற்றி உள்ளதாக அறிந்த கணவன், மனைவியை கத்தி ஒன்றின் மூலம் குத்தி கொலை செய்துள்ளார். Person kill cheated wife France
Mennecy பகுதியில் மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்த 45 வயதுடைய நபர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில், ’17’ அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு, தாம் மனைவியை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர். அவரின் மனைவி, பல வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் படுக்கையில் இருந்துள்ளார். மனைவியின் வயது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இச் சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மனநல அழுத்தத்துக்குள் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். அப்பகுதி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
tags :- Person kill cheated wife France
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்!
- 10 மாச குழந்தைக்கு பாதிரியார் செய்த செயல்!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- இளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா? கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க!