பருத்தித்துறை கடலில் படகு ஓட்டி விளையாட முயற்சித்த மாணவர்கள் : ஒருவர் பலி

0
450
paruthithurai jaffna Drowning

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடலில் படகு ஓட்டி விளையாட முயற்சித்த பாடசாாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.(paruthithurai jaffna Drowning)

மூன்று பேர் படகு ஓட்ட முயற்சித்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 14 வயதுடைய பாடசாலை மாணவராகும். அவர்கள் ஓட்டிய படகு திடீரென கவிழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

படகு கவிழ்ந்ததனை அவதானித்த மீனவர்கள் சிலர் மாணவர்களை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:paruthithurai jaffna Drowning,paruthithurai jaffna Drowning,,paruthithurai jaffna Drowning,