இன்று கண்டிக்கு விஜயம் செய்து சபாநாயகர் கரு ஜயசூரிய மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.Parliment Speaker Visits Kandy sri lanka tamil news
இதன் போது தற்போது நிலவும் அரசியல் குழப்ப நிலைமையை சுமுகமான நிலைமைக்கு கொண்டுவருவதற்கு மகாநாயக்க தேரர்கள் சரியான முறையில் வழிகாட்ட வேண்டும் என சபாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் மகாநாயக்க தேரர்கள் முன்னின்று பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்துள்ளதாகவும் தற்போதைய நிலவரத்தினை சண்டைகள் மூலம் தீர்க்க முடியாது எனவும் அதற்கு சரியான இடம் பாராளுமன்றம் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மை உள்ளவர்களுக்கு பதவியை வழங்கி ஜனநாயகத்தை மதிக்குமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய மகாநாயக்க தேரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!