க்லைபொஸேட்டின் பூச்சிநாசினி தடையை நீக்குவதற்கு முன்னர் நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களினதும் க்லைபொஸேட் தொடர்பான சிறுநீர் சோதனையொன்றை மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. (Parliament Members must urine test)
இதேவேளை, முதலில் சிறுநீர் மாதிரியை நவீன் திஸாநாயக்கவிடமிருந்து பெற வேண்டும் எனவும் இந்த பரிசோதனைக்கான செலவுகளை நாட்டுக்காக தனது சங்கம் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
க்லைபொஸேட் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு முன்னரே ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் சிறுநீரில் ‘ க்லைபொஸேட்’ உள்ளதா என சோதனை செய்த போது, அனைவரின் சிறுநீர் மாதிகளிலும் ‘ க்லைபொஸேட் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் சில வருடங்களுக்குள் ஐரோப்பா முழுவதும் ‘ க்லைபொஸேட்டை தடை செய்வதற்கு ஐரோப்பா நாடாளுமன்றம் ஏகமனதாக முடிவு எடுத்ததாகவும், இதனை தாங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.
மேலும் அனைத்து பயிர்களுக்கும் உள்ள தடையை நீக்குவதாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்கள் எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பாகவும் அதன் பின் உள்ளவர்களினதும், பந்நாட்டு நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர்களுக்கு நாட்டிலுள்ள சட்டங்கள் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வைத்தியர் அலுத்கே தெரிவித்தார்.
பொறுப்பற்ற முறையில் எதேச்சதிகாரமாக செயற்படும் பூச்சிக்கொல்லிகள் தொடர்பான பதிவாளர் ஜெனரலை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு
- குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை அதிரடியாகக் கைது
- ஜனாதிபதி ஜோர்ஜியாவிற்கு விஜயம்
- மனைவியை சித்திரவதைப்படுத்திய கணவனுக்கு கிடைத்த தண்டனை
- ஹஜ் யாத்திரிகளிடம் பண மோசடி; நீதிமன்றில் வழக்கு தொடர தீர்மானம்
- பலம்வாய்ந்த பாதாள உலக கோஷ்டியை உருவாக்கத் திட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Parliament Members must urine test