{ Parliament elections simultaneously
நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வசதியாக பொது வாக்காளர் பட்டியலை தயாரிக்க பிரதமர் மோடி ஆலோசனை கோரியதாக நிதி ஆயோக் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
பொது வாக்காளர் பட்டியல் உருவாக்கினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மாநில அரசுகள் பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் என்று பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில் கோரியதாக நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலைக் கொண்டு வர தேர்தல் ஆணையம், சட்டக் கமிஷன், நாடாளுமன்ற கமிட்டி ஆகியவை யோசனைகளை முன் வைத்துவருகின்றன. ஆனால், அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இருப்பினும் ஒருவேளை இந்த முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு வசதியாக இந்த பொதுவாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனையை பிரதமர் மோடி கேட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
Tags: Parliament elections simultaneously
<< மேலதிக இந்திய செய்திகள் >>
*டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
*விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?
*அமெரிக்க பொருட்களுக்கு ரூ.1,600 கோடி வரி! – இந்தியா அதிரடி நடவடிக்கை!
*காவிரியில் வெள்ளப்பெருக்கு: தமிழகத்துக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!
*கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!