ஆயிரக்கணக்கானோர் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் பாலித தெவரப்பெரும!

0
175

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்றையதினம் (19–04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாலித தெவரப்பெருமவின் இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் கட்டிய கல்லறையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கடந்த 16ஆம் திகதி பிற்பகல் தனது தனியார் காணியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (17-04-2024) இரவு மத்துகம யடதொடவத்தையில் உள்ள வீட்டிற்கு அவரது சடலம் கொண்டு வரப்பட்டது.

அன்றிலிருந்து நேற்று காலை வரை தெவரப்பெருமாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல்வாதிகள், பிரதேசவாசிகள் உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.