பாகிஸ்தான் அதிகாரியை 24 மணி நேரத்தில் வெளியேறுமாறு உத்தரவு

0
61

இந்தியாவின் புதுதில்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் பணியாற்றும் பாகிஸ்தான் அதிகாரி ஒருவருக்கு 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அந்த அதிகாரி இந்தியாவில் தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு பொருத்தமற்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் அதனால் இந்திய அரசாங்கம் அவரை சட்டவிரோத நபராக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் (மே 13) இது தொடர்பாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின் பொறுப்பு அலுவலகத்திற்கு உத்தரவு ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.