இம்ரான் கானின் தலைமையில் பாகிஸ்தான் அமைதி பெறலாம் -ஜனாதிபதி நம்பிக்கை

0
484
Pakistan take peaceful country president maithripala said Lankan news

இம்ரான் கானின் தலைமையில் கீழ் அந்நாடு அமைதிபெறும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Pakistan take peaceful country president maithripala said Lankan news

பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான்கானுக்கு வாழ்த்து தெரிவித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானை பிரதமராக, அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று தேர்ந்தெடுத்தது.

அதனைத் தொடர்ந்து அவர் இன்று முற்பகல் அவர் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், பல நாடுகளின் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Pakistan take peaceful country president maithripala said Lankan news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites