தமிழ் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. யார் டைட்டிலை பெறப் போகிறார்கள் என எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் குறித்து ஓவியா செய்த டுவீட், பலரையும் குழப்பத்தில் தள்ளியுள்ளது. Oviya post aboutt bigg boss seasan 2
கொஞ்சல் தமிழ் பேசி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஐஸ்வர்யா சர்வாதிகார டாஸ்க் செய்யும் போது ஓவராக ஆட்டம் போட்டதால் ரசிகர்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள். இதனால், அவர் சீக்கிரம் வெளியேற்றப்பட வேண்டும் என மற்றவர்களிற்கு வாக்களித்து காத்திருக்கும் போது ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புக்கு மாறாக காப்பாற்றப்படுகிறார். சமீபத்தில் கூட ஐஸ்வர்யா வெளியேறாமல், சென்றாயன் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், நடிகை ஓவியா வெறுமெனே “ஐஸ்வர்யா தத்தா” என ட்வீட் செய்துள்ளார். அதனால், ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு எனச் சொல்கிறாரா? அல்லது எதிர்க்கிறாரா? அல்லது அவர்தான் வெற்றியாளர் என திட்டவட்டமாக அறிவிக்கிறாரா என புரியாமல் நெட்டிசன்கள் குழம்புகின்றனர். ஏற்கனவே ஓவிய புரியாத புதிர் போல தான். தற்போது அவரின் டுவிட்டுகள் கூட புரியவில்லை.