கனடாவில் 60,000 குடியேறிகளுக்கு வழங்கப்படவுள்ள வாய்ப்பு!

0
341

அடுத்த ஆண்டில் குபெக் மாகாணத்தில் 60000 குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024ம் ஆண்டில் 50000 பேர் கியூபெக்கில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக கியூபெக் மாகாண முதல்வர் பிரான்ஸ்வா லெகொல்ட் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் அடுத்த ஆண்டில் மொத்தமாக சுமார் அறுபதாயிரம் குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குடியேறிகளுக்கு வழங்கும் சந்தர்ப்பத்தை அதிகரிக்க விரும்பவில்லை எனவும் அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கினால் அது பிரெஞ்சு மொழிய பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் இந்தப் பகுதியில் 60,000 குடியேறிகளுக்கு வழங்கப்படவுள்ள வாய்ப்பு! | 60K Immigrants In 2024 Impose French Requirements

வழமையான நடைமுறைகளின் கீழ் 50000 குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சு மொழி பட்டதாரிகளுக்கு 6500 வாய்ப்புகளும், முதலீட்டாளர்களுக்கு 6000 வாய்ப்புக்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மொத்தமாக சுமார் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கியூபெக் மாகாணத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.