ICC ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை!

0
212

இலங்கை வீரர் பிரவீன் ஜெயவிக்ரம Praveen Jayawickrama ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஓராண்டு தடை விதித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு விதிகளை மூன்று முறை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரம மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2021 லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் ஊழல் தடுப்பு பிரிவுக்கு அறிவிக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.