மேலும் ஒரு பில்லியன் யூரோக்களை சிரியாவுக்கு வழங்கவிருக்கும் ஜெர்மனி!

0
1086
One Million Euro Donate Germany, Million Euro Donate Germany, Euro Donate Germany, Donate Germany, Germany
Photo Credit: CNBC.com

(One Million Euro Donate Germany)

ஐக்கிய நாடுகள் அமைப்பு 13 மில்லியன் மக்கள் அவசர உதவிகளுக்காக காத்திருப்பதாகக் கூறி உதவி கோரியுள்ள நிலையில் சிரியாவுக்கு மேலும் ஒரு பில்லியன் யூரோக்களை வழங்குவதாக ஜெர்மனி உறுதியளித்துள்ளது.

ஒரு பில்லியன் யூரோக்களை சிரியாவுக்கும் சிரிய அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ள நாடுகளுக்கும் வழங்க இருப்பதாக ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் இன்று அறிவித்தார்.

மனிதநேய உதவிகளை மட்டுமே நம்பி சிரியாவில் மட்டுமே 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருப்பதாக சிரியாவுக்கு மனிதநேய உதவிகளைக் கோரும் ஒரு நிகழ்ச்சிக்காக Brussels வந்த மாஸ் கூறினார்.

சிரிய மக்களை நாம் அப்படியே விட்டு விட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் பட்ஜெட் இறுதியாக்கப்பட்டதும் இன்னொரு 300 மில்லியன் யூரோக்களும் உறுதியளிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த முறை ஐக்கிய நாடுகள் அமைப்பு சிரியாவுக்கான உதவிகளை முன்வைத்தபோது அதிக தொகையை வழங்கிய நாடு ஜெeர்மனிதான், அது 4.5 பில்லியன் யூரோக்களை வழங்கியது.

ஏழு ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

Web Title : One Million Euro Donate Germany

Tamil News