திருமணமாகி 42 ஆண்டுகள் கழித்து பிறந்த பெண் குழந்தை : எப்படி சாத்தியமாகும்

0
597
Old Couple Baby Birth 42 Years Latest Tamil Gossip,tamilgossip,india,tamil naadu,42 years later,tast tube baby,tamil gossip

(Old Couple Baby Birth 42 Years Latest Tamil Gossip )

திருமணமாகி 42 ஆண்டுகள் கழித்து ஒரு தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது .இந்தியா ஈரோடு பகுதியை சேர்ந்த தம்பதியிருக்கு 63 வயதில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்நத தம்பதியினர் கிருஷ்ணன்(71)- செந்தமிழ்ச்செல்வி (63). இவர்களுக்கு திருணமாகி 42 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால், மிகுந்த மனச்சோர்வு அடைந்த அந்த தம்பதியினர் பல்வேறு கோயில், குளம், மருத்துவமனைக்குச் சென்றனர்.

இந்நிலையில், தற்போது மதுரை மாவட்டம் பழநியில் உள்ள ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தில், செயற்கை கருத்தரிப்பு மூலம் செந்தமிழ்ச்செல்விக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

பல ஆண்டுகள் கழித்து மூதாட்டிக்கு பிறந்துள்ள அப்பெண் குழந்தை மூன்றரை கிலோ எடையுள்ளதாகவும், தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்டன் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“1974ம் ஆண்டு எனக்கு திருமணம் ஆனது. அன்றிலிருந்து இன்று வரையில் எங்களுக்கு ஒரு பிள்ளை பேறு கூட கிடைக்கவில்லை. எத்தனையோ இடங்களுக்கு சென்று வந்தோம். ஆனால், ஒன்றும் கைக்கொடுக்கவில்லை. தற்போது இந்த சிகிச்சை மையத்துக்கு வந்தோம்.

இறைவன் கருணையில் எங்களுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எந்த குறைபாடோடும் இறக்கக் கூடாது என்று மனதில் ஆழமாக எண்ணம் தோன்றியது. குடும்ப சூழ்நிலையும் எங்களுக்கு மிக மனவேதனையுடனே இருந்தது. தற்போது எல்லா குறையும் நீங்கியுள்ளது”. இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

News source:www.newstig.net

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Old Couple Baby Birth 42 Years Latest Tamil Gossip