NPP அரசாங்கம் அதிரடி; குடும்பத்தோடு கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல

0
128

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்தனர். இந்த நிலையில் அவரும் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.