நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வடக்கு முதல்வருடன் சந்திப்பு!

0
387
Norwegian Foreign Minister meets Northern Chief Minister

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென் புரோலிச் ஹொல்ட் (Jen Frolich Holte) இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். (Norwegian Foreign Minister meets Northern Chief Minister)

இந்தச் சந்திப்பு யாழ். கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து நோர்வே வெளிவிகார இராஜாங்க அமைச்சர், யாழ். குடாநாட்டின் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர்,

நான் யாரிடமும் ஜனாதிபதியிடமும் வேறு யாரிடமும் என்னை நீடிக்கும் படியோ, எங்களுடைய பதவியை நீடிக்கும் படியோ கோரவில்லை. தேர்தலைப் பிற்போட அரசு தீர்மானித்துள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது, ‘மாகாணத் தேர்தலை அரசு பிற்போட்டு நீண்ட காலம் கொடுத்தால் ஆளுநரின் ஆட்சிவரும் – ஆளுநரின் ஆட்சிவந்தால் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் எங்களுக்குத் தந்த அதிகாரம் இல்லாமல் போய்விடும்.

அதனைத் தவிர்க்க எங்களுடைய ஆட்சியை நீடிக்கவேண்டும் அல்லது தேர்தலை நடத்தவேண்டும் என்று கூறினேன் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

tags :- Norwegian Foreign Minister meets Northern Chief Minister

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை