யாழ் மாநாகரசபையின் ஆறாவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை மாநகரசபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.(Northern Provincial emmanuel arnold revealed truth,Tamilnews)
இந்த அமர்வின்போது யாழ் மாநகரசபை மேயரின் அதிகார துஷ்பிரயோக முயற்சியொன்று அம்பலத்திற்கு வந்தது. தனது தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்தின்போது, அதிகாரபூர்வ வாகனத்தை பயன்படுத்த முயற்சித்த தகவல் வெளியாகியது. எனினும், அதிகாரிகள் அதற்கு இடமளிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆறாவது அமர்வின்போது, மாநகரசபை முதல்வருக்கு வாகனம் வழங்கியிருக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் முதல்வரும் போர்க்கொடி தூக்கினர். ஈ.பி.டி.பியும் அதை ஆதரித்தது. எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதை எதிர்த்தது.
எனினும், அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. உள்ளூராட்சி அமைச்சின் கட்டளை சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி ஆயைாளரின் உத்தரவிற்கமைய முதல்வரின் தனிப்பட்ட பணயங்களிற்கு வாகனம் அனுப்ப முடியாது என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
த.தே.ம.முன்னணியின் வி.மணிவண்ணன் குறிப்பிடும்போது- சட்டத்தின் பிரகாரம் அனைத்தும் நடக்க வேண்டும். அதை மீறி இலஞ்சம், ஊழல் இருக்ககூடாது. முதல்வரின் தனிப்பட்ட பயணத்திற்கு வாகனம் வழங்க முடியாதென்றால், வழங்க கூடாதுதான். ஒருவர் பிழை செய்கிறார் என்றால், மற்றவர்களும் பிழை செய்ய கூடாது என்றார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த முதல்வர்- மனைவிக்கு முன் கேவலப்பட்டு நிற்கக்கூடாதென்பதற்காகவே வாகனத்தை கோரினேன். அது கிடைக்காதென தெரிந்ததும் மாற்றுவழியை ஏற்பாடு செய்தேன் என்றார்.
அண்மையில் தனது குடும்பத்துடன் தனிப்பட்ட பிரான்ஸ் சுற்றுலாவிற்கு முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் சென்றிருந்தார். நாடு திரும்பி, விமானநிலையத்தில் இருந்து யாழ் வரவே வாகனத்தை கோரியிருந்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- பொகவந்தலாவையில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
- வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:Northern Provincial emmanuel arnold revealed truth,Northern Provincial emmanuel arnold revealed truth,